எழுச்சிமிகு வசனங்கள், காதல்... - ‘ஆகஸ்ட் 16, 1947’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘ஆகஸ்ட் 16, 1947’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள படம் ‘ஆகஸ்ட் 16,1947’. ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ரேவதி, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படம் சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயே படைகளை எதிர்த்து களமாடிய ஒருவரின் கதையாக உருவாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படத்தின் ட்ரெய்லரில் கௌதம் கார்த்திக் தனித்து தெரிகிறார். சுதந்திரத்திற்கு முந்தைய கதையின் டெம்ப்ளேட்டான ஆங்கிலேயர்களிடம் அடிவாங்கி அவர்களை எதிர்க்கும் அதே பாணி இப்படத்திலும் தவறாமல் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

‘பயந்துட்டே இருக்குற உங்களுக்கு சுதந்திரம் கிடைச்சா மட்டும் என்னடா ஆகப்போகுது?’ என்ற நாயகனின் எழுச்சிமிகு வசனங்கள் பார்த்து பழகியவை. இடையில் அரண்மையில் வசிக்கும் பெண்ணுக்கும் அடித்தட்டு நாயகனுக்குமான காதலின் பதிவும் வந்து செல்கிறது. பார்த்து பழகிய காட்சிகளால் கோர்க்கப்பட்டுள்ள ட்ரெய்லராக இருந்தாலும், கதையில் வித்தியாசம் இருக்குமா என்பதை படம் பார்த்தே முடிவுக்கு வர முடியும். ஏப்ரல் 7-ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE