நடிகை கங்கனா ரனாவத் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில் அவர் ‘சந்திரமுகி’ கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.
கடந்த 2005-ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'சந்திரமுகி' பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும், அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது படத்தின் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
» 60 சவரன் தங்கம், வைர நகைகள் மாயம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போலீஸில் புகார்
» ‘அயோத்தி’ பட இயக்குநருக்கு தங்க செயின் பரிசளித்த நடிகர் சசிகுமார்
மேலும் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பு தளத்தில் கங்கனா சந்திரமுகி கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை ராகவா லாரன்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்தப் புகைப்படத்தில் ராகவா லாரன்ஸூம் சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்திற்கான ஒப்பனையுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago