நயன்தாராவின் 75-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. படத்தின் தலைப்பு விரைவில் வெளியாக உள்ளது.
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கடந்தாண்டு இறுதியில் நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘கனெக்ட்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் நயன் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகிறார். தொடர்ந்து ஜெயம்ரவியுடன் இணைந்து ‘இறைவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் நாட் ஸ்டூடியோஸ், ஜீ ஸ்டூடியோஸ் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து நயன்தாராவின் 75-வது படத்தை தயாரிக்கின்றன.
புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜா ராணி படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா, ஜெய் மற்றும் சத்யராஜூடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago