“காதல் தோல்வியால் இரவெல்லாம் அழுதிருக்கிறேன்” - நடிகை ஆத்மிகா 

By செய்திப்பிரிவு

“வாழ்க்கையில் உங்களுக்கு பணமா புகழா என்று யாராவது கேட்டால், நிச்சயம் பணம்தான் முக்கியம் என்று சொல்வேன்” என ‘கண்ணை நம்பாதே’ படத்தின் நாயகி ஆத்மிகா தெரிவித்துள்ளார்.

மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா நடித்துள்ள ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் திரையரங்குகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது பர்சனல் விஷயங்களை பகிர்ந்துள்ள நடிகை ஆத்மிகா, “என்னுடைய காதல் தோல்விதான் எனக்கு அதீத பாதிப்பை ஏற்படுத்தியது. அது சொல்லிக் கொடுத்தது போன்ற சிறந்த அனுபவம் வேறெதுவும் கிடையாது. எங்கள் காதலில் என்னை காதலித்தவர்தான் என்னை விட்டு விலகிச் சென்றார்.

அது எனக்கு வருத்தம்தான். அதை நினைத்து இரவெல்லாம் கூட அழுதிருக்கிறேன். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் உங்களுக்கு பணமா புகழா என்று யாராவது கேட்டால், நிச்சயம் பணம்தான் முக்கியம் என்று சொல்வேன். ஏனென்றால், அதுதான் யதார்த்தம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எதிர்பாராத விதமாக என் அப்பா சமீபத்தில் இறந்து விட்டார். அதுவும்கூட மோசமான அனுபவம் தான். அப்பாவை எப்போதுமே மிஸ் செய்வேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்