‘ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்’ - இந்திய கிரிக்கெட் வீரர்களை சந்தித்த ரஜினிகாந்த்

By செய்திப்பிரிவு

மும்பை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் போட்டியை கண்டுகளித்தார். தொடர்ந்து இன்று இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கலேவின் அழைப்பை ஏற்று இந்தப் போட்டியை நேரில் காண நடிகர் ரஜினிகாந்த் நேற்று மும்பை வந்திருந்தார். அமோல் கலேவுடன் இணைந்து இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

ரஜினியின் வருகை தொடர்பாக அமோல் காலே கூறுகையில், “போட்டியைக்காண நான் நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்தேன். என்னுடைய அழைப்பை ஏற்று ரஜினி இங்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. நீண்ட நாட்களுக்குப்பிறகு ரஜினி வான்கடே மைதானத்திற்கு வந்தது எங்களுக்கு மிகப் பெரிய கௌரவம்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் இந்திய அணி வீரர்களான குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள குல்தீப் யாதவ், “ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்” என கேப்ஷனிட்டுள்ளார். தொடர்ந்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரேவையும் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்