புதுச்சேரி கடற்கரையில் மாவீரன் சண்டைக்காட்சி

By செய்திப்பிரிவு

‘மண்டேலா' மடோன் அஸ்வின் இயக்கும் 'மாவீரன்' படத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் இந்தப் படம் உருவாகி வருகிறது. நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். பரத் ஷங்கர் இசை அமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் கடல் அருகே சண்டைக்காட்சி படமாக்கப்பட இருக்கிறது. ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் யானிக் பென் (Yannick Ben) இந்தக் காட்சியை அமைக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE