விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ‘பிக்கிலி’ பாடல் வெளியீடு

By செய்திப்பிரிவு

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘பிக்கிலி’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவரே இயக்கவும் செய்கிறார்.

காவ்யா தாப்பர், யோகிபாபு, ஜான் விஜய், மன்சூர் அலிகான், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே தயாரித்து படத்தொகுப்பும் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பிக்கிலி’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. படம் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததது குறிப்பிடத்தக்கது. பாடல் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE