இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் ஆட்டத்தை நேரில் கண்டு ரசிக்கும் ரஜினி

By செய்திப்பிரிவு

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. வான்கடே விளையாட்டு திடலுக்கு வருகை தந்துள்ள ரஜினிகாந்த் ஆட்டத்தை கண்டு ரசித்து வருகிறார்.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று வாகை சூடியது. டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியா அணி களமிறங்கி 15 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 42 ரன்களை சேர்த்து ஆடி வருகிறது. இந்நிலையில், மும்பை வான்கடே விளையாட்டுத் திடலில் நடைபெறும் ஒருநாள் ஆட்டத்தைக் காண நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்துள்ளார். மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கலேவும் ரஜினியும் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே உரையாடும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அமோல் காலே கூறுகையில், “போட்டியைக்காண நான் நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்தேன். என்னுடைய அழைப்பை ஏற்று ரஜினி இங்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. நீண்ட நாட்களுக்குப்பிறகு ரஜினி வான்கடே மைதானத்திற்கு வந்தது எங்களுக்கு மிகப் பெரிய கௌரவம்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்