க்வெண்டின் டாரண்டினோ தனது கடைசிப் படத்தில் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் அமெரிக்க திரைப்பட விமர்சகர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
‘பல்ப் ஃபிக்ஷன்’, ‘கில்பில்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களின் மூலம் தனக்கென தனி அடையாளத்தைப் பெற்று உலகப்புகழ்பெற்ற இயக்குநர் க்வெண்டின் டாரண்டினோ. இவரது இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு லியனார்டோ டிகாப்ரியோ, பிராட் பிட் நடிப்பில் ‘ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்’ (Once Upon a Time in Hollywood) திரைப்படம் வெளியானது. இந்நிலையில், டாரண்டினோ அடுத்ததாக 1970-களின் பிற்பகுதிகளில் லாஸ் ஏஞ்செல்ஸை களமாக கொண்டு படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
‘தி மூவி கிரிட்டிக்’ (The Movie Critic) என பெயரிடப்பட்டுள்ள இப்படம் பாலின் கேல் (Pauline Kael) என்ற திரைப்பட விமர்சகரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெறும் திரைப்பட விமர்சகராக மட்டுமல்லாமல் பாலின் கேல் வாழ்க்கையின் பல்வேறு பக்கங்களை இப்படத்தில் காட்சிப்படுத்த டாரண்டினோ திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக, தன் வாழ்நாளில் மொத்தம் 10 படங்களை மட்டுமே இயக்குவேன் அல்லது 60-வது வயதில் திரைத்துறையிலிருந்து விலகிவிடுவேன் என டாரண்டினோ தெரிவித்திருந்தார். அதன்படி அவர் தற்போது வரை 9 படங்களை இயக்கியுள்ளார். ‘தி மூவி கிரிட்டிக்’ அவருக்கு 10-வது படம். இப்படத்துடன் டாரண்டினோ ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இம்மாத்ததுடன் அவர் 60 வயதை எட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago