பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதிக்குள் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘தங்கலான்’. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹாலிவுட் நடிகர் டான் கால்டஜிரோனா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 15-ம் தேதி கேஜிஎஃப்பில் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தின் பிரதான கதைக்களமான கேஜிஎஃப் கதைக்களத்தில் நடக்கும் படப்பிடிப்பு இன்னும் 3 வாரங்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது.
இந்த கேஜிஎஃப் பகுதியின் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்பு அடுத்த 15 நாட்கள் ஷெட்யூலில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த 15 நாட்கள் ஷெட்யூலில் 10 நாட்கள் சென்னையிலும் 5 நாட்கள் மதுரையிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அடுத்த மாத இறுதிக்குள் ‘தங்கலான்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
27 mins ago
சினிமா
35 mins ago
சினிமா
39 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago