“நான் இன்னும் கனவில்தான் இருக்கிறேன்” - ‘நாட்டு நாட்டு’ ஆஸ்கர் குறித்து ராம் சரண் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

“நான் இன்னும் கனவில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்; எல்லையற்ற அன்புக்கு நன்றி” என ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் வென்றது குறித்து நடிகர் ராம் சரண் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நம் வாழ்விலும், இந்திய சினிமாவின் வரலாற்றிலும் ‘ஆர்ஆர்ஆர்’ மிகச் சிறந்த திரைப்படமாக நிலைத்திருக்கும். ஆஸ்கர் விருதை பெற்றுக்கொடுத்த அனைவருக்கும் வெறும் நன்றி என்று மட்டும் என்னால் சொல்லி கடந்துவிட முடியாது. என்னைப் பொறுத்தவரை நான் இன்னும் கனவில் தான் இருக்கிறேன்.

உங்களின் எல்லையற்ற ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள். எஸ்.எஸ்.ராஜமவுலியும், எம்.எம்.கீரவாணியும் நம் இந்தியத் திரையுலகின் விலைமதிப்பற்ற ரத்தினங்கள். இந்த தலைசிறந்த படைப்பின் ஒரு பகுதியாக இருக்க எனக்கு வாய்ப்பளித்த இருவருக்குமே நன்றி” என தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த விருதை இசையமைப்பாளர் எம்.எம்கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் இருவரும் விருது பெற்றுக்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE