நடிகை தீபிகா படுகோனை வெறும் நடிகையாக சுருக்கிவிட முடியாது. அதைத்தாண்டிய அவரின் சாதனை பயணத்தைப் பார்ப்போம்.
கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘ஓம் சாந்தி ஓம்’ படம் மூலம் தனது கேரியரைத் தொடங்கிய நடிகை தீபிகா படுகோன் அதே ஷாருக்கானுடன் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பதான்’ படம் வரை நடித்திருக்கிறார். கிட்டதட்ட 13 ஆண்டுகள் பல்வேறு கதாபாத்திரங்களின் வழியே நடிப்பின் மூலம் தன்னை திரைத்துறையில் நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். சொல்லப்போனால் ஹாலிவுட்டின் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு இணையான ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட ‘பதான்’ படத்தில் தீபிகா, தான் சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தில் அப்படியே கச்சிதமாக பொருந்தியிருந்தார். தீபிகா படுகோனை வெறும் திரைத்துறையைச் சேர்ந்த நடிகராக மட்டும் சுருக்கிவிடமுடியாது.
தீபிகா எனும் ப்ராண்ட்: இதை தவிர்த்து உலக அளவில் தீபிகா படுகோன் ஒரு ப்ராண்டாக உயர்ந்திருப்பது உண்மையில் ஆச்சரியமான வளர்ச்சி. கடந்த ஆண்டு இறுதியில், அவர் லூயிஸ் உய்ட்டனின் (Louis Vuitton) ப்ராண்டின் உலகளாவிய தூதரானார். பாரிஸ், மாஸ்கோ மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களின் முக்கிய ப்ராண்டுங்களுக்கான முகமாக அறியப்படுகிறார் தீபிகா. அதுமட்டுமல்லாமல் அவர் 82°E என்ற தனது சொந்த ப்ராண்டையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இது தவிர, சில நாட்களுக்கு முன்பு கத்தார் ஏர்வேஸ் அவரை நிறுவன தூதராக ஒப்பந்தம் செய்தது.
பிரெஞ்சு சொகுசு பேஷன் ஹவுஸின் 167 ஆண்டுகால வரலாற்றில், முதன்முறையாக ஒரு இந்தியர் அதன் உலகளாவிய பிராண்ட் தூதராக உள்ளார். 2022-ம் ஆண்டு கார்டியர் (Cartier) அதன் உலகளாவிய முகமாக தீபிகாவை ஒப்பந்தம் செய்தது. ஒன்பது வருட இடைவெளிக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவில் இடம்பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் தீபிகா.
» “அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது” - இயக்குநர் விக்னேஷ் சிவன்
இதையெல்லாம் கடந்து இந்தியாவைப் பெருமைப்படுத்தும் வகையில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளராக தீபிகா படுகோன் பங்கேற்க இருப்பது அவரின் உலகளாவிய வளர்ச்சியை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. கடந்தாண்டு நடந்து முடிந்த கால்பந்து உலக கோப்பை போட்டிக்கான கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார் தீபிகா. ஃபிபா உலக கோப்பையை அறிமுகம் செய்யும் முதல் இந்தியர் மற்றும் பாலிவுட் நடிகை என்ற பெருமையை பெற்றார் அவர்.
நடிப்பைத் தாண்டி: நடிப்பைத் தாண்டி தீபிகா பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மனநல ஆரோக்கியம் தொடர்பாக தான் சந்தித்த போராடங்களை வெளிப்படுத்தி வரும் அவர், ‘லைவ், லவ், லாஃப்’ (Live Love Laugh) என்ற அறக்கட்டளையை தொடங்கி மனநலன் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 2020-ம் ஆண்டு ஒரு கிராமத்தை தத்தெடுத்த அவர், அக்கிராம மக்களுக்கு மின்சாரம் வழங்கி உதவியிருக்கிறார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் ஜேஎன்யூ பல்கலைகழகத்தில் கொடூர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி நின்றவர் தீபிகா படுகோன். அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் #BlackLivesMatter-க்கு ஆதரவாக நின்று இன்ஸ்டாகிராமில் கருத்தை பதிவிட்டதற்காக விமர்சிக்கப்பட்ட பல பாலிவுட் நடிகர்களில் படுகோனும் ஒருவர். இப்படியாக தீபிகா, ரன்வீர் சிங்குக்குடனான திருமணத்திற்கு பின்பும் தனக்கான பாதையில் திட்டமிட்டு திடமாக பயணித்து வருகிறார். மேலும், உலக அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்துபவராகவும் விளங்கி வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
24 mins ago
சினிமா
50 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago