நடிகை என்பதற்காக இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை: வரலட்சுமி சரத்குமார்

By செய்திப்பிரிவு

“நடிகை என்பதற்காக இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமுமில்லை” என நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படம் தொடர்பான நேர்காணலின்போது, வரலட்சுமியிடம் உடல் எடை குறைத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பியபோது, “உடல் என்பது என் உரிமை. நடிகை என்பதற்காக இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உடல் எடை அதிகமாகிக் கொண்டே போனதால், சில உடல்நலப் பிரச்சினைகளையும் நான் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. மேலும், இப்போது நான் ஹைதராபாத்தில்தான் தங்கி இருக்கிறேன்.

படப்பிடிப்பு, வேறு ஏதும் முக்கிய விஷயங்கள் என்றால் மட்டுமே சென்னை வந்து போகிறேன். அப்படி இருக்கும்போது தெலுங்கு சினிமாக்களுக்கு என்று சில விஷயங்கள் தேவைப்படுகிறது. அதற்காகவும் உடல் எடையைக் குறைத்தேன். எனவே, யார் என்ன சொன்னாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். உங்களுக்காக நீங்கள் செய்ய வேண்டும் என்று விரும்புவதைச் செய்யுங்கள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

மேலும்