சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் இரண்டாவது சிங்கிளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘பத்து தல’. இந்தப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜய் அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் முதல் சிங்கிளான ‘நம்ம சத்தம்’ கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இந்நிலையில் ‘பத்து தல’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘நினைவிருக்கா’ பாடல் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
ப்ரோமோ: இருட்டறையில் இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா ஏ.ஆர்.ரஹ்மானிடம் பாடல் காட்சிக்கான சூழலை விளக்கிக்கொண்டிருக்கிறார். அவருடன் பாடலாசிரியர் கபிலன் அமர்ந்திருக்கிறார். இயக்குநர் சூழலை விளக்க ‘நினைவிருக்கா’ என தொடங்கலாமா என கபிலன் கேட்க, நன்றாக உள்ளதே என கூறி ட்யூன் போடுகிறார் ரஹ்மான். இறுதியில் ‘சார் இளம் சிங்கர் ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் அமீனை பாட வைக்கலாம்’ என இயக்குநர் கூற ரஹ்மானின் மகன் அமீன் பாடலை பாடுகிறார். அவருடன் இணைந்து இப்பாடலை சக்தி ஸ்ரீகோபாலன் பாடியிருக்கிறார். ப்ரோமோ வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago