நடிப்பில் மிரட்டும் சூரி - கவனம் ஈர்க்கும் ‘கொட்டுக்காளி’ முதல் பார்வை வீடியோ

By செய்திப்பிரிவு

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் ‘கொட்டுக்காளி’ படத்தின் முதல் பார்வை வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல், படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘கனா’ படத்தை தயாரித்திருந்தார். தொடர்ந்து அவர் தற்போது தயாரிக்கும் புதிய படத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார். அவருடன் அனன்யா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ‘கூழாங்கல்’ பட புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கும் இப்படத்திற்கு ‘கொட்டுக்காளி’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இப்படத்தின் முதல் பார்வை வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முதல் பார்வை எப்படி? - இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் காட்சிகளின் வழியே கதையை அழுத்தமாக சொல்பவர். கிட்டத்தட்ட ஓட் உலக சினிமா பாணி. இந்தப் படத்திலும் அவர் அதையே கையாண்டிருப்பதை வீடியோ உணர்த்துகிறது. லென்த் ஷாட், லைவ் சவுண்ட் என மிரட்டியிருக்கிறார். 47 செகன்ட் வீடியோதான் என்றாலும் அதில், கை நடுக்கத்துடன் சிகரெட்டை பிடித்திருக்கும் சூரியின் அந்த நடிப்பு கவனம் ஈர்க்கிறது. இந்த வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்