அறிவழகனின் ‘சப்தம்’ படத்தில் இணைந்த நடிகை லைலா

By செய்திப்பிரிவு

இயக்குநர் அறிவழகன் இயக்கி வரும் ‘சப்தம்’ படத்தில் நடிகை லைலா இணைந்துள்ளார். அண்மையில் படத்தில் நடிக்க நடிகை லக்‌ஷ்மி மேனன் ஒப்பந்தமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

‘ஈரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன். இவர் அடுத்ததாக நடிகர் ஆதியுடன் கைக்கோத்து ‘சப்தம்’ படத்தை இயக்கி வருகிறார். அத்துடன் இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். ஆல்பா பிரேம்ஸ் இயக்குநர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படிப்பிடிப்பு கடந்த ஆண்டு டிச.14-ம் தேதி தொடங்கியது.

இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். அண்மையில் படத்தில் கதாநாயகியாக நடிகை லட்சுமிமேனன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஹாரர் திரில்லராக உருவாகும் 'சப்தம்' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மூணாரில் நிறைவடைந்தது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப்பின் ‘சர்தார்’ படத்திலும், ‘வதந்தி’ இணையத் தொடரிலும் நடித்த நடிகை லைலா ‘சப்தம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE