ராம் சரண் படத்தின் தலைப்பு சிஇஓ?

By செய்திப்பிரிவு

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஜெயராம் உட்பட பலர் நடிக்கின்றனர்.

தில் ராஜூவின் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக ராம்சரண் நடிப்பதாகக் கூறப்படுகிறது. தமன் இசை அமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு ‘சிஇஓ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE