நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல் அவதிப்பட்டு வரும் தயாரிப்பாளர் வி.ஏ.துரையின் மருத்துவ செலவுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கருணாஸ் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
‘என்னம்மா கண்ணு’, ‘பிதாமகன்’, ‘லூட்டி’, ‘கஜேந்திரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. ரஜினியின் ‘பாபா’ படத்திலும் எக்சிகியூட்டிவ் புரொடியூசராக பணியாற்றியுள்ளார். தமிழில் பல்வேறு படங்களை தயாரித்த வி.ஏ.துரை நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருகிறார். மனைவி, மகளை பிரிந்துள்ள வாழும் அவர், தற்போது விருகம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார்.
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உதவியால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பிய அவர் எழுந்து உட்காரும் அளவிற்கு உடல்நலம் தேறியிருக்கிறார். இருப்பினும் அவரது காலில் காயங்கள் இன்னும் ஆரவில்லை. அத்துடன் உடல் மெலிந்தும் அன்றாட மருத்துவ செலவுகளுக்கே பணமில்லாமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு நடிகர் சூர்யா 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியுள்ளார். அதேபோல நடிகர் கருணாஸ் 50 ஆயிரம் ரூபாய் நிதி கொடுத்து உதவியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago