‘மலைக்கோட்டை வாலிபன்’ கதை: தயாரிப்பாளர் விளக்கம்

By செய்திப்பிரிவு

மலையாளத்தில், ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவர் இப்போது மோகன்லால் நடிப்பில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜனவரி 18-ம் தேதி ராஜஸ்தானில் இதன் படப்பிடிப்புத் தொடங்கியது. அங்கு பொக்ரானில் ஏராளமான வெளிநாட்டு துணை நடிகர்களுடன் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதில், பிரிட்டீஷ் இந்தியாவின் பிரபல மல்யுத்த வீரரான ‘தி கிரேட் காமா’ கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பதாக தகவல் வெளியானது. காமா என்கிற குலாம் முகமது பக்ஷ் பட்(1878 - 1960) பிரிட்டிஷ் இந்தியாவில் பிரபல மல்யுத்த வீரராக இருந்தவர். பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் சென்றார்.

இந்நிலையில் இந்தத் தகவலை தயாரிப்பாளர் ஷிபு மறுத்துள்ளார். இந்த வதந்திகள் மக்களின் கற்பனை என்றும் படம் பற்றிய கூடுதல் தகவல்களை விரைவில் அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்