பாடல் காட்சி படப்பிடிப்பில் விபத்து: உயிர் தப்பினார் ஏ.ஆர்.ரஹ்மான் மகன்

By செய்திப்பிரிவு

பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன். இவர், ‘ஓ காதல் கண்மணி’, ‘2.O’, 'தில் பேச்சாரா’ உட்பட பல படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார். தனியாக ஆல்பம் வெளியிட்டு வருகிறார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு, ஒரு பாடல் காட்சிப் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது கிரேனில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகள் கீழே விழுந்ததில் அவர் காயமின்றி தப்பியுள்ளார்.

இதுபற்றி அவர், “பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பில் பங்கேற்றேன். குழுவினர், பாதுகாப்பு விஷயங்களைச் சரியாகச் செய்திருப்பார்கள் என நம்பினேன். கேமரா முன் பாடுவதில் கவனமாக இருந்தபோது, கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விளக்குகள் திடீரென்று விழுந்தன. சில அங்குலமோ, சில வினாடியோ முன் பின் ஆகி இருந்தால் எங்கள் தலையில் அவை விழுந்திருக்கும். இந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீள முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

மேலும்