அழுத்தமான வசனங்கள் - ஜெயம் ரவியின் ‘அகிலன்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

ஜெயம் ரவி நடித்துள்ள ‘அகிலன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. ட்ரெய்லர் குறித்து பார்ப்போம்.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘பூலோகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடையாளம் பெற்றவர் என்.கல்யாண கிருஷ்ணன். அவர் மீண்டும் ஜெயம் ரவியுடன் கைகோத்திருக்கும் படம் ‘அகிலன்’. ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ படத்தைத் தொடர்ந்து ஜெயம்ரவி நடிப்பில் வரும் மார்ச் 10-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தில் ப்ரியாபவானிசங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது படக்குழுவால் வெளியிடபட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - “குற்றஉணர்ச்சி, நன்றி. விஸ்வாசம், ஒழுக்கம் இதெல்லாம் சமூகம் அடிமையாக்க உருவாக்கியிருக்கிறது”, “பங்குசந்தையில இருந்து சராசரி மனுசன் வாங்குற வெங்காயம் வரைக்கும் பொருளோட விலைய தீர்மானிக்கிறது சீ ட்ராஃபிக் தான்” போன்ற வசனங்கள் ட்ரெய்லரின் கவனம் ஈர்க்கின்றன. துறைமுகத்தின் வழியே நிகழும் சந்தை பொருளாதாரம், முறைகேடுகள் குறித்து படம் பேசும் என ட்ரெய்லரின் காட்சிகள் உணர்த்துகின்றன. சில, பல டீடெய்லிங்குடன் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்