நடிகர் தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் உலக அளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியான படம் ‘வாத்தி’. இப்படம் தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் வெளியிடபட்டது. இந்தப் படத்தில் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார்.
மேலும், சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்த இப்படம் 8 நாட்களில் ரூ.75 கோடியை வசூலித்ததாக படத்தின் இயக்குநர் அதிகாரபூர்வமாக படத்தின் வெற்றிவிழாவில் தெரிவித்திருந்தார்.
» “நான் சிம்புவின் பக்தன்; ஹெலிகாப்டரில் புரோமோஷன் பண்ணுவேன்” - ‘பத்து தல’ குறித்து கூல் சுரேஷ்
» “நடிகர் விஜய்க்கும் பொறுப்பு உண்டு” - ‘லியோ’ படத் தலைப்பு குறித்து சீமான் அறிவுரை
இந்நிலையில், தற்போது படம் வெளியாகி 15 நாட்களை கடந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் படம் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் லாபத்தை ஈட்டியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
54 mins ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago