“வாழ்க்கையில் கோபப்பட்டு நிறைய இழந்திருக்கிறேன். கோபப்படுவதால் ஒன்றும் நடக்கபோவதில்லை. தொடக்கத்தில் என்னை வைத்து இந்தப் படம் இயக்கமாட்டேன் என இயக்குநர் தெரிவித்துவிட்டார்” என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சொப்பன சுந்தரி’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், லஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், நடிகர்கள் கருணாகரன், சுனில் ரெட்டி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.அஜ்மல் தஹ்ஸீன் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையை விஷால் சந்திரசேகர் அமைத்திருக்கிறார். டார்க் காமெடி பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “கதையின் நாயகியாக ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு என்னுடைய பலமே இயக்குநர்கள் தான். 'கனா' படத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் அருண் ராஜா, 'க/பெ ரணசிங்கம்' படத்தை வழங்கிய இயக்குநர் விருமாண்டி, 'சொப்பன சுந்தரி' படத்தை வழங்கிய இயக்குநர் சார்லஸ் என இவர்கள்தான் காரணம். நடிகர், நடிகைகள் நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்கு இயக்குநர்கள் தான் காரணம். ஒரு இயக்குநரால் தான் நடிகர் நடிகைகளை பிரம்மாண்டமாகவும், பிரமிப்பாகவும், காட்சிப்படுத்த முடியும். அந்த வகையில் எனக்கு இயக்குநர்கள் மிகவும் முக்கியம்.
» In Car Review: த்ரில்லர் களத்தில் பதற்றமிகு பயணம் தரும் தாக்கம் என்ன?
» அயோத்தி Review: மனிதத்தைச் சொல்வதில் கவனம் ஈர்க்கும் படைப்பு
இயக்குநர் சார்லஸ், முதலில் இந்தப் படத்தை என்னை நாயகியாக வைத்து இயக்க மாட்டேன் என்று கோபத்துடன் கூறிவிட்டார். அதன் பிறகு அவரை நான் அழைத்தவுடன் வருகை தந்தார். அவருடைய கோபத்தின் ஆயுள் அவ்வளவுதான். அதன்பிறகு கோபத்தால் எதுவும் நிகழாது. அதனால் இழப்பு ஏற்படுவதுதான் அதிகம். நான் வாழ்க்கையில் நிறைய முறை கோபப்பட்டிருக்கிறேன். அதனால் ஏராளமானவற்றை இழந்திருக்கிறேன்.
பிறகு இருவரும் கதையைப் பற்றி விவாதித்தோம். அவருடைய அணுகுமுறையைக் கண்டு வியந்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய திட்டமிடல் நேர்த்தியாக இருக்கும். எந்த ஒரு கலைஞரையும் காத்திருக்க வைக்காமல், அவர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார். என்னுடைய பங்களிப்பை முப்பது நாளில் நிறைவு செய்தார்.
'சொப்பன சுந்தரி' படத்தை நான் பார்த்து விட்டேன். நான் இதுவரை சோகம் கலந்த கதாபாத்திரங்களையும், உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படத்தில் முற்றிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஏனெனில் வாழ்க்கையில் மிகவும் கடினமான வேலை என்னவென்றால்... மற்றவர்களை சிரிக்க வைப்பது. கண்ணீர் விட வைப்பது எளிது. ஆனால் சிரிக்க வைப்பது என்பது சாதாரண விசயமல்ல. இது சரியாக செய்து விட்டால், அவர்களை விட சிறந்த நடிகை வேறு யாரும் இருக்க முடியாது. அதனை இந்தப் படத்தில் நான் முயற்சித்திருக்கிறேன்.
இந்தத் திரைப்படத்தில் நான் நடித்திருக்கும் அனைத்து காட்சிகளும், இயக்குநர் சொல்லித் தந்ததை அப்படியே பிரதிபலித்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் புகைப்படதிற்கு பதிலாக என் புகைப்படத்தை வைத்துகொள்ளும் அளவிற்கு அந்தப் படத்தின் நடிகர் பட்டாளத்தை இயக்குநர் இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். திரையரங்கு சென்று படத்தைப்பாருங்கள்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
சினிமா
22 mins ago
சினிமா
30 mins ago
சினிமா
51 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago