ஜம்மு: “உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பை பெற்றமைக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும், அது போதாது” என இயக்குநர் மிஷ்கின் உடன் ‘லியோ’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரைத் துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் காஷ்மீரில் நடைபெற்று வருகின்றன. இதில் இயக்குநர் மிஷ்கின் நடித்துள்ளார். இந்தச் சூழலில் அவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
“உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றமைக்கு நான் நன்றி உள்ளவனாகவும், அதிர்ஷ்டம் செய்தவனாகவும் உணர்கிறேன். இந்த உணர்வை வெளிப்படுத்த எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது. இருந்தாலும் மில்லியன் நன்றிகள் சார். நீங்கள் செட்டில் இருந்த தருணம் அற்புதமானதாக இருந்தது” என லோகேஷ் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
» “சிலிண்டருக்கு ரூ.100 மானியம்... திமுகவுக்கு தேர்தல் வாக்குறுதி நினைவிருக்கிறதா?” - தினகரன் கேள்வி
» சென்னை எல்ஐசி கட்டிட பகுதியில் வருகிறது அடுக்குமாடி கட்டிடங்கள்: சிஎம்டிஏ புதிய திட்டம்
முக்கிய செய்திகள்
சினிமா
31 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago