‘அரண்மனை4’ திரைப்படத்தில் நடிகை ராஷிகண்ணா மற்றும் தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அரண்மனை’. ஹாரர் - காமெடி பாணியில் உருவான இப்படம் ரசிகர்களிடையே வணிக ரீதியாக வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. அரண்மனை படத்தின் 3 பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில், நான்காவது பாகம் விரைவில் உருவாக உள்ளது. இதில் சந்தானம், விஜய்சேதுபதி ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், மற்ற படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட் காரணமாக நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இந்தப் படத்தில் நடிகைகள் தமன்னா, ராஷிகண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளளது. இதில் ஏற்கெனவே, நடிகை ராஷிகண்ணா ’அரண்மனை3’-ல் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
44 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago