டீ கடையில் உருவான குடி மகான் கதை

By செய்திப்பிரிவு

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரித்துள்ள படம், ‘குடிமகான்’. பிரகாஷ்.என் இயக்கியுள்ளார். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனுஜ் மேனன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், விஜய் சிவன் நாயகனாகவும் சாந்தினி தமிழரசன் நாயகியாகவும் நடிக்கின்றனர். இதன் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில், பிரகாஷ்.என் பேசும்போது, “நட்பு, நம்பிக்கை இரண்டையும் அடிப்படையாக வைத்து தான் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. படத்தில் குடி என்பது ஒரு பகுதி மட்டும்தான். மற்றபடி கமர்சியல் அம்சங்கள் நிறைந்ததாக படம் உருவாகியுள்ளது. குடும்பத்துடன் இந்தப் படத்தைப் பார்க்கலாம்” என்றார்.

விஜய் சிவன் பேசும்போது, “நாளைய இயக்குநர் மூலம் என்னை நடிகராக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பிரகாஷ். கரோனா காலகட்டத்தில் தான் இந்தப் படம் பற்றி பேச துவங்கினோம். லாக்டவுன் ஒரு பக்கம் இருந்தாலும் தினமும் தவறாமல் கதைபேசி இந்த ஸ்கிரிப்டை உருவாக்கினோம். குறிப்பாக டீ கடையில் நாங்கள் பேசி பேசி உருவாக்கியதுதான் இந்த குடிமகான் கதை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

42 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்