‘வெந்து தணிந்தது காடு’ க்ளைமாக்ஸில் ’பத்து தல’ தோற்றம் - கவலை பகிர்ந்த இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா

By செய்திப்பிரிவு

சிலம்பரசனின் ‘பத்துதல’ தோற்றம் குறித்து நேர்ந்த சங்கடத்தை இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் இம்மாத இறுதியில் வெளியாக உள்ள திரைப்படம் ‘பத்து தல’. ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ள இப்படத்தின் இசைவெளியீட்டு விழா அடுத்த மாதம் 18-ம் தேதி நடக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா படம் தொடர்பாக சமீபத்தில் கொடுத்த நேர்காணல் ஒன்றில், “‘வெந்து தணிந்தது காடு’ பட க்ளைமாக்ஸில் நடிகர் சிலம்பரசன் ‘பத்துதல’ கெட்டப்பில் வந்தது சங்கடமாக இருந்தது எனக் கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர், “சிம்பு எனக்கு நல்ல நண்பர். மேலும், கெளதம் மேனனும் நல்ல நண்பரே. அவரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அதனால், பரவாயில்லை என நினைத்துக் கொண்டேன். மேலும், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் ‘பத்துதல’ தோற்றத்தை ரசிகர்கள் கவனித்து ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சியே’ என தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் மணல் மாஃபியா கிங்காக சிம்பு நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

மேலும்