“என் தாயார் இன்றும் 7-8 மணி நேரம் உழைக்கிறார். யாரையும் சாராமல் வாழும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறார்” என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாய் குறித்தும் அவரது உழைப்பு குறித்தும் பதிவிட்டு வருகிறார். பண்ணையில் பணியாற்றும் தனது தாயின் புகைப்படங்களை கங்கனா நேற்று பதிவிட்டிருந்தார். இன்று ட்விட்டரில் அது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் ரசிகர்களுடன் உரையாடினார். அதில் அவர், “எனது தாயார் ஒரு ஆசிரியையாக பணியாற்றியவர். இப்போதும் ஒரு நாளில் 7-8 மணி நேரம் வயல்வெளியில் பணி புரிகிறார். சினிமா பார்ப்பது, வெளிநாடு செல்வது, வெளியே சாப்பிடுவது ஆகியவற்றை அறவே தவிர்த்து விடுவார். நான் அழைத்தாலும் வர மாட்டார்.
இந்த வயதிலும் தன்னுடைய உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ரொட்டியும் கொஞ்சம் உப்பும் இருந்தால், எவர் கையையும் எதிர்பார்க்காது வாழும் தன்னம்பிக்கையை தந்திருக்கிறார். அதனால்தான் நான் மற்ற நடிகையர் போல திருமண விழாக்களில் ஆடுவதில்லை. ஐட்டம் பாடல்களிலும் தலைகாட்டுவதில்லை. இந்த மாஃபியா சினிமா என்னை புரிந்துகொள்ளவும் கையாளவும் தடுமாறுகிறது. என்னுடைய நேர்மையும் திடமான மனப்பான்மையும் எங்கிருந்து வந்தது என்பது இப்போது புரிந்திருக்கும்” என பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
57 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago