நாங்கள் ஒன்றும் உலகை காக்கவில்லை - 'பாய்காட் பாலிவுட்' குறித்து ரன்பீர் கபூர்

By செய்திப்பிரிவு

மும்பை: “திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படுகின்றன. நாங்கள் ஒன்றும் உலகை காக்க வரவில்லை” என ‘பாய்காட் பாலிவுட்’ குறித்து நடிகர் ரன்பீர் கபூர் கருத்து தெரிவித்துள்ளார்.

ரன்பீர் கபூர் நடிப்பில் மார்ச் 8-ம் தேதி ‘தூ ஜூதி மெயின் மக்கார்’ (Tu Jhoothi Main Makkaar) படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்வுகளில் கலந்துகொண்டுகள்ள நடிகர் ரன்பீர் கபூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பாய் காட் பாலிவுட் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது ஆதாரமற்றது. தொற்று நோய் காலத்திற்கு பிறகு பல்வேறு எதிர்மறையான விஷயங்கள் அரங்கேறியுள்ளன.

திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படுகின்றன. நாங்கள் ஒன்றும் உலகை காப்பாற்றவில்லை. ஆகவே பார்வையாளர்கள் கவலைகளை மறக்க திரையரங்குகளுக்கு வருகிறார்கள். பெரிய திரையில் திரைப்படங்களைப் பார்க்க, நேரத்தை நல்ல முறையில் கழிக்க வருகிறார்கள். பாய்காட் பாலிவுட்டை புரிந்துகொள்ள இயலவில்லை” என்றார்.

அவரிடம், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறீர்களா என கேட்டதற்கு, “கங்குலி வாழும் லெஜண்ட். இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் அவர் கொண்டாடப்படுகிறார். அவருடைய வாழ்க்கை வரலாறு மிகவும் ஸ்பெஷலானது. துரதிஷ்டவசமாக எனக்கு அந்த படத்தில் நடிக்க அழைப்பு எதுவும் வரவில்லை. படத்தை இயக்குபவர்கள் இன்னும் அதன் ஸ்கிரிப்டை எழுதிகொண்டிருக்கிறார்களா? என தெரியவில்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE