உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணை நம்பாதே’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத் தலைவன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து உதயநிதி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘கண்ணை நம்பாதே’. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை அடுத்து மு.மாறன் இயக்கும் படம் இது.

இதில் ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உட்பட பலர் நடித்துள்ளனர். சித்துக்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் தயாரிக்கிறார். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: க்ரைம் த்ரில்லருக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. கணிக்க முடியாத கதையுடன் அடுத்தடுத்த ‘கட்’ கவனிக்க வைக்கிறது. ‘இந்த உலகத்துல நடக்குற எல்லா கொலைகளுக்குப் பின்னாடியும் அழுத்தமான காரணம் இருக்கும்’ என தொடங்கும் ட்ரெய்லர் கொலையை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளதை உணர்த்துகிறது. இரவையொட்டி காட்சிகளால் நீளும் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படம் வரும் மார்ச் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

37 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்