‘ஸ்ரீதேவி உடனான முதல் புகைப்படம்’ - நினைவு தினத்தில் பகிர்ந்த போனி கபூர்

By செய்திப்பிரிவு

இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகராக திகழ்ந்த ஸ்ரீதேவியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரை நினைவுகூர்ந்த அவருடைய கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களை வென்றவர் நடிகர் ஸ்ரீதேவி. பல்வேறு மொழிப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகராக வலம் வந்தவர், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் உறவினர் திருமண விழாவில் பங்கேற்க துபாய்க்கு குடும்பத்தோடு சென்றபோது உயிரிழந்தார். அவரது 5-ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், மகள் ஜான்வி கபூர் மற்றும் கணவர் போனி கபூர், ஸ்ரீதேவியின் கடந்த கால புகைப்படங்களை தங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மனைவி ஸ்ரீதேவி உடனான புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார்.

ஸ்ரீதேவி உடனான கடைசி புகைப்படமாக, துபாய் திருமண விழாவில் உறவினர்கள் மத்தியில் தோன்றும் படத்தை நேற்று போனி கபூர் பதிவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, மனைவி ஸ்ரீதேவி உடனான முதல் புகைப்படமாக கருப்பு - வெள்ளையிலான படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்