ஒரு கிடாயின் கருணை மனு இயக்குநரின் அடுத்தப் படமான சத்திய சோதனை படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், விதார்த், ரவீனா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'ஒரு கிடாயின் கருணை மனு'. விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுகளை பெற்றது இப்படம். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இதன் இயக்குநர் சுரேஷ் சங்கையா அடுத்தப் படத்தை இயக்கியுள்ளார்.
சத்திய சோதனை எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்வயம் சித்தா, ரேஸ்மா மற்றும் தமிழ்த் துறைப் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
ஒரு காவல் நிலையத்தை மையமாக கொண்டு நடக்கும் கதையாக சத்திய சோதனை படம் அமைந்துள்ளது. டீசரின் தொடக்கத்திலேயே பொதுவுடைமை மற்றும் தனியுடமை பற்றி பேசுகிறார் நீதிபதியாக வரும் ஞானசம்பந்தன். ரசிக்கும்படியாக அமைந்துள்ள இந்த டீசர் கவனம் ஈர்த்துள்ளது.
» ‘மன வருத்தமாக உள்ளது. தவறான தகவல் பரப்பாதீர்கள்’ - மயில்சாமி மறைவு குறித்து மகன் பேட்டி
» “இந்திய சினிமாவுக்கும், தெலுங்கு திரையுலகுக்கும் பெருமை” - ராம்சரண் குறித்து நெகிழ்ந்த சிரஞ்சீவி
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
10 mins ago
சினிமா
31 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago