இந்தியில் ரீமேக் ஆகிறது ‘லவ் டுடே’ - அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்த ‘லவ் டுடே’ திரைப்படம் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்த அறிவிப்பை அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.

கடந்த 2022 நவம்பரில் வெளிவந்த படம் லவ் டுடே. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனே இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இவானா, யோகி பாபு, சத்யராஜ், ராதிகா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இளைஞர்களின் அதீத வரவேற்பை இந்தப் படம் பெற்றது. 100 கோடி ரூபாய்க்கு மேல் படத்தின் வசூல் சென்றுள்ளதாக தகவல்.

இந்நிலையில், இந்தப் படம் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. “லவ் டுடே படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். பேன்டம் பிலிம்ஸ் உடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறோம். விரைவில் படக்குழு குறித்து அறிவிக்கப்படும்” என அர்ச்சனா ட்வீட் செய்துள்ளார்.

இந்தி ரீமேக்கிலும் இயக்குநர் பிரதீப், நாயகனாக நடிக்க வேண்டும் என பலரும் சொல்லி வருகின்றனர். அதே நேரத்தில் புதுமுகம் அல்லது இஷான் கட்டர் அல்லது விக்கி கவுஷலை நாயகனாக நடிக்க செய்யலாம் என்றும். நாயகியாக சாரா அலிகான் பொருத்தமாக இருப்பார் என்றும் சிலர் சொல்லி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்