மகத்தான கலைஞர்களை காலம் ஒருபோதும் விட்டுவைப்பதில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உள்வாங்கிவிடுகிறது. பூத உடல்களை காலம் கரைந்தாலும், நினைவுகள் நீர்த்துபோவதில்லை. கலைஞர்களுக்கு மட்டுமே கிடைத்த அழியா வரப்பிரசாதம் அது. அப்படியாக வயிறு வலிக்க சிரிக்க வைத்து கவலைகளை மறக்கடித்த மகத்தான கலைஞன் ஒருவரை அவரின் படங்களின் வழியே நினைவுகூர்த்து வழியனுப்புவோம். ‘தேங்க்யூ மயில்சாமி’.. போய் வாருங்கள்!
இரு மாபெரும் கலைஞர்கள் சங்கமிக்கும் காட்சிகளை காணும் பார்வையாளர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள். பேறு பெற்றவர்கள். அப்படியான தருணங்களையும் காட்சிகளையும் நமக்காக தந்துவிட்டுச் சென்றவர்கள் விவேக் - மயில்சாமி. இருவரின் காம்போவில் உருவான நகைச்சுவைக்காட்சிகளை காலம் எந்த கரைப்பான் கொண்டும் அழிக்கமுடியாது. நீண்ட நேரமெல்லாம் யோசிக்கத்தேவையில்லை. திருப்பதிக்கு செல்பவர்களால் ‘லட்டுக்கு பதிலா ஜிலேபி விட்டாருன்னு விட்டியேடா ஒரு பீலா’ என்ற வசனத்தை மறந்து மலையேறிடமுடியாது. அப்படியான விவேக் - மயில்சாமி காம்போவில் ரசிக்க வைத்த காட்சிகள் ஏராளம்.
பாளையத்து அம்மன்: ‘மல்லாக்க படுத்த பசுமாடு, மவுண்ட்ரோட்ல மலை பெஞ்சா சுடுகாடுன்னு எழுதியிருகான்ல’ என விவேக் சொன்னதும் ‘என்னங்க யூகே அழிஞ்சிடும்னு சொல்றாரு’ என இருவருக்குமிடையிலான அந்த உரையாடல் உண்மையில் அற்புதமானது. இன்று இப்போது பார்த்தாலும் இருவரின் உடல்மொழியும் ரசிக்க வைக்கும். மயில்சாமி மொத்த காட்சியிலும் சிரித்துக்கொண்டே விவேக்கை எதிர்கொள்ளும் விதத்தில் அட்டகாசம் செய்திருப்பார். முன்னதாக அவர் நடந்து வரும் காட்சியில் அவருக்கான அந்த பின்னணி இசையும், அதற்கேற்ற ஸ்டெப்பிலும் மிரட்டியிருப்பார் மனுசன். எல்லாத்தையும் தாண்டி அத்தனை வசவுகளை விவேக் முன்வைக்கும்போது அமைதியாக இருக்கும் மயில்சாமி, ‘மைக்கு திருடன பய இந்த பய’ என சொல்லும்போது, ‘மைக்க திருடனனு மட்டும் சொல்லாதீங்க’ என கோவப்படும் வெகுவாக ரசிக்க வைக்கும். அந்த மொத்த சீக்வன்சிலுமே இரண்டு பேரும் இணைந்து அதகளம் செய்திருப்பார்கள். மயில்சாமியின் உடல்மொழியில் ஸ்கோர் செய்யக்கூடிய கலைஞன் என்பதை நிரூபித்திருப்பார்.
» நேற்றைய மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொண்ட மறைந்த நடிகர் மயில்சாமி - வைரலாகும் வீடியோ
» மயில்சாமிக்கு புகழஞ்சலி | ‘வறியோர்க்கு உதவும் மனிதநேய மாண்பாளர்’ - சீமான் இரங்கல்
கண்டேன் சீதையை: விவேக்கும், மயில்சாமியும் இணைந்து ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியை கச்சிதமாக மறுஆக்கம் செய்திருப்பார்கள். ‘குடுவாஞ்சேரி கோவிந்தசாமி’யாக மயில்சாமியின் இந்த நகைச்சுவைக்காட்சி பொக்கிஷம். ‘14ஆவது கேள்விக்கும் சரியா பதில் சொன்னீங்கன்னா 1 கோடி ரூபா’ என சொல்லும்போது, ‘அப்போ 14வது கேள்வி இப்போவே கேட்டீங்கன்னா 1 கோடி வாங்கிட்டு போயிடுவேன்’ என வசனமெல்லாம் மிரட்டல் ரகம். மயில்சாமியும் -விவேக்கும் சேர்ந்த மொத்த காட்சியையும் மெருகேற்றியிருப்பார்கள்.
பெண்ணின் மனதை தொட்டு: தூய தமிழை சென்னை பாஷையில் மொழி பெயர்ப்பு செய்யும் மயில்சாமியின் அந்த ஸ்லாங்கும், உடல்மொழியும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும். ‘காந்தி சொன்ன மாரி, காமராஜர் சொன்ன மாரி’, ‘கம்முனு இருங்க. யார் மேலையும் காண்டாகாதீங்க’ என மொழியை வார்த்தையில் மட்டுமல்லாமல் உடலிலும் சேர்த்து உடல்மொழியும் அட்டகாசம் செய்திருப்பார்.
Loading...
தூள்: விவேக்குக்கும், மயில்சாமிக்கும் ட்ரேட் மார்க் படமாக அமைந்தது ‘தூள்’. இருவரின் காம்போவில் விளைந்த காமெடிகள் படத்தை வேறொரு தளத்தில் கொண்டு சேர்திருக்கும். இவரின் கெமிஸ்ட்ரி கச்சிதமாக ஒட்டியிருப்பது பெரும் பலம். ‘பாஸ்’ என கூறி அவர் பேசும் வசனங்களுக்கேற்ற முகபாவனைகள், டைமிங் ரியாக்சன்கள் நகைச்சுவைக்கு உத்தராவதம் கொடுத்திருக்கும். திருப்பதி சென்று வந்ததாக ஏமாற்றி மாட்டிக்கொள்ளும் காட்சியை மட்டும் எடுத்துகொள்வோம். விவேக்கிற்கு தான் அந்தகாட்சியில் டையலாக்குகள் இருக்கும். மயில்சாமியை பொறுத்தவரை வெறும் ரியாக்சன்கள் மட்டும்தான். அதை திறம்பட கையாண்ட விதத்தில் இன்றும் காட்சிக்கு உயிரூட்டிக்கொண்டிருக்கிறார்.
அதேபோல திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் ‘ஐ எம் வேணுகோபால் ஃபரம் டைட்டில் பார்க்’ என குடித்துவிட்டு பேசும் மயில்சாமி யதார்த்த நடிப்புடன் நகைச்சுவையை கலந்துகட்டி மிரட்டியிருப்பார். கருணாஸ், தனுஷூக்கு இடையே சொற்ப வசனங்களைக்கொண்ட அந்த காட்சியில் தனக்கென தனி முத்திரை பதித்திருப்பார். ‘முடியாது.. என்னால நடக்க முடியாது’ ‘ஐ எம் பினிஷ்டு’ என கூறும்போது, ‘ஆட்டோ வேணா சொல்லட்டுமா வேணு’ என கருணாஸ் கேட்கும்போது, ‘அது அனாவசியம். அமௌண்ட் கொடுத்தா நானே போயிடுவேன். நீங்களும் ஆட்டோல வறீங்களா?’ என கூறி ‘அமௌண்டு’ என சொல்லும்போது நகைக்காமல் இருக்க முடியாது. அப்போ நீ சும்மா தான் வந்தியா எனும்போது, ‘எப்போவும் சும்மா தான் வருவேன்’ என மயில்சாமியின் அந்த மொழியின் ஏற்ற இறங்களின் மூலம் நிஜ குடிகாரரை கண் முன் நிறுத்துவார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago