பெங்களூரு | மகா சிவராத்திரி விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்த் பெங்களூருவில் உள்ள வாழும் கலை அமைப்பின் மகா சிவரத்திரி விழாவில் பங்கேற்றுள்ளார்.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு மங்களூருவில் நடைபெற்றுவரும் நிலையில் அங்கிருந்து பெங்களூருவுக்கு வந்துள்ள நடிகர் ரஜினி, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்தி வரும் மகா சிவரத்திரி விழாவில் பங்கேற்றுள்ளார். தனது மனைவி லதாவுடன் நடிகர் ரஜினி தியானம் செய்துவரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

முன்னதாக இன்று மாலை தனது அண்ணன் சத்தியநாராயணனுடன் பெங்களூருவில் உள்ள 112 அடி உயர ஆதியோகி மையத்திற்கு வழிபாடு நடத்தினார் ரஜினி. தனது அண்ணனுடன் அவர் காரில் சென்ற புகைப்படமும் இணையத்தில் வெளியாகி டிராண்டாகி வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்தது. தற்போது, மங்களூருவில் நடந்து வரும் படப்பிடிப்பில் முக்கிய ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார் ஆகியோர் நடித்து வர, அவர்களுடன் தற்போது யோகிபாபுவும் இணைந்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்