ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள ‘பஹிரா’ திரைப்படம் வரும் மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மை டீயர் பூதம்’, ‘பொய்க்கால் குதிரை’ படங்களைத்தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பஹிரா’. இந்தப் படத்தை ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘ஏஏஏ’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்தில் பிரபு தேவா 10-க்கும் மேற்பட்ட கெட்டப்களில் நடித்துள்ளார். இப்படத்தில் அமைரா தஸ்தூர், சோனியா அகர்வால், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், ஜனனி, காயத்ரி என 6 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
பெண்களை காதலில் விழ வைக்க, சைக்கோவாக மாறி பல கொலை செய்யும் கொலைக்காரன் என சைக்கோ த்ரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. பரதன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் இசையமைப்பாளராக கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படம் வரும் மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago