‘அரபிக் குத்து’ பாடல் வெளியாகி ஓராண்டு நிறைவு: கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்றிருந்த ‘அரபிக் குத்து’ பாடல் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் ‘ஒன் இயர் ஆப் அரபிக் குத்து’ என அதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த 2022 ஏப்ரல் மாதம் வெளியாகி இருந்த திரைப்படம் பீஸ்ட். இதில் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், சதீஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் சுமார் 236.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் முதல் சிங்கிள் பாடலாக அரபிக் குத்து பாடல் கடந்த ஆண்டு ‘பிப்ரவரி 14’ அன்று வெளியாகி இருந்தது. இந்தப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார். சுமார் 4.40 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்தப் பாடலின் வரிகள் குறித்து அப்போது வைரலாக பேசப்பட்டு இருந்தது. பாடலை அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி ஆகியோர் பாடி இருந்தனர்.

படம் வெளியானதும் இந்த பாடலுக்கு நடிகர் விஜய் ஆடிய நடன அசைவுகள் கவனம் பெற்றன. அந்த நடனத்தை அதன் பிறகு பலரும் பல இடங்களில் ஆடி அசத்தியிருந்தனர். இந்த சூழலில் இந்தப் பாடல் வெளியாகி ஓராண்டு ஆகியுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதே போல விஜய் நடிப்பில், அனிருத் இசையில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘குட்டி ஸ்டோரி’ பாடலும் இதே ‘பிப்ரவரி 14’ அன்று 2020-ல் வெளியாகி இருந்தது. இந்தப் பாடலை விஜய் பாடி இருந்தார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாடல் லிங்க்..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்