சென்னை வந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிகை நயன்தாராவை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
'பதான்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜவான்'. அட்லீ இயக்கும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க, நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 'ஜவான்' பட ஷூட்டிங்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
'பதான்' படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஷாருக்கான் மும்பையில் இருந்து நேற்று சென்னை வந்தார். நேற்றே சென்னையில் உள்ள நடிகை நயன்தாராவின் இல்லத்திற்கு நடிகர் ஷாருக்கான் சென்றுள்ளார். ஷாருக்கான் வருவதை அறிந்த குடியிருப்புவாசிகள் அவருடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நயன்தாராவை சந்தித்த ஷாருக்கான் அவரிடம் பேசிவிட்டு கிளம்பியுள்ளார். நடிகர் ஷாருக்கானை அவரது கார் வரை வந்து நயன்தாரா வழியனுப்பி வைத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
49 mins ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago