காதலர் தின ஸ்பெஷல்: தியேட்டர்களில் விடிவி முதல் மின்னலே வரை ரீரிலீஸ்

By செய்திப்பிரிவு

காதலர் தினத்தையொட்டி தமிழக திரையரங்குகளில் க்ளாஸிக் காதல் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

டைட்டானிக் (Titanic): பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி 1997-ம் ஆண்டு ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் லியனார்டோ டிகாப்ரியோ - கேட் வின்ஸ்லெட் நடிப்பில் உருவாகி ‘காதல் காவியம்’ என போட்டப்படும் ‘டைட்டானிக்’ படம் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரிலீஸ் செய்யபட்டுள்ள இப்படம் ஹஸ்புல்லாகி வருகிறது.

தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே (Dilwale Dulhania Le Jayenge): 1995-ம் ஆண்டு வெளியாகி இந்திய சினிமாவில் அதிக நாட்கள் திரையரங்கில் ஓடிய ஷாருக்கான் - காஜோலின் ‘தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே’ பாலிவுட் படம் மீண்டும் ரிலீஸ் செய்யபட்டுள்ளது. பாலிவுட்டின் ‘க்ளாஸிக்’ காதல் படமான இப்படத்தின் காட்சிகளும் ஹாஸ்ப்புல்லாகியுள்ளது.

விண்ணைத்தாண்டி வருவாயா: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு - த்ரிஷா நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படம் இந்தியிலும் ரீமேக் ஆனது. காதலர் தினத்தையொட்டி படம் மீண்டும் வெளியிடப்பட்டு காட்சிகள் ரசிகர்களால் சீட்டுகள் நிறைந்து வருகின்றன.

மின்னலே: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளியானது ‘மின்னலே’. மாதவன் மற்றும் ரீமா சென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படத்தின் பாடல்கள் இன்றும் கொண்டாடப்படுகின்றன. மாதவனுக்கு 'சாக்லேட் பாய்' என்ற பெயரை வாங்கி கொடுத்தது இந்தப்படம். காதல் படங்களுக்கான வரிசையில் இடம்பெற்றிருக்கும் இப்படம் ரசிகர்களால் விரும்பி புக் செய்யப்படுகிறது.

பிரேமம்: அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி,மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியானது. மலையாளத்தில் படம் வெளியானபோதும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்டது. தமிழகத்தில் படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

ஹிருதயம்: வினீத் சீனிவாசன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான ‘ஹிருதயம்’ படத்தில் பிரணவ் மோகன்லால் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களில் தமிழ்நாட்டிலும் நன்றாக ஓடிய இப்படம் மீண்டும் ரிலீஸாகியுள்ளது.

லவ் டுடே: கடந்தாண்டு இறுதியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்