“நான் ‘பான் இந்தியா நடிகர்’ அல்ல... நடிகர்” - நடிகர் விஜய் சேதுபதி

By செய்திப்பிரிவு

‘பான் இந்தியா ஸ்டார் என சொல்லிக் கொள்வதில் எப்போதும் எனக்கு விருப்பமில்லை’ என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் பிப்ரவரி 10 முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் இந்தத் தொடர் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. ‘தி பேமிலி மேன்’ தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகேவும் இணைந்து இதனை எழுதி, இயக்கி உள்ளனர்.

இந்நிலையில் ‘பார்ஸி’ வெப்சீரிஸ் தொடர்பாக விஜய் சேதுபதி அளித்த பேட்டி ஒன்றில், ‘என்னை பான் இந்தியா ஸ்டார் என சொல்லிக் கொள்வதில் எப்போதும் எனக்கு விருப்பமில்லை. அதைவிட நல்ல நடிகர் என்ற பாராட்டுகளையே நான் விரும்புகிறேன்.

'பான் இந்தியா' என்ற விஷயம் ஒரு நடிகருக்கும், இயக்குநருக்கும், ஏன் படத்துக்குமே அழுத்தம் தரக்கூடிய ஒன்று. குஜராத்தி, பெங்காலி என எந்த மொழியானாலும் அதில் வாய்ப்புக் கிடைத்தால் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன்” என்றார்.

மேலும் அவரது உடல் எடை குறைப்பு குறித்து கேட்டதற்கு, “எனக்கு டயட்டில் நம்பிக்கையில்லை. தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்துகொள்வதால் உடற்பயிற்சியும் செய்ய முடிவதில்லை. எனக்குப் பிடித்த உணவுகளை உட்கொள்ள முடியவில்லை என்றால் வாழ்க்கை திருப்தியடையாது” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்