சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘சாகுந்தலம்’ படம் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தேதி மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே 3டி தொழில்நுட்ப பணிகளால் தேதி மாற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை மாற்றபட்டுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘யசோதா’ திரைப்படத்திற்கு பிறகு நடிகை சமந்தாவின் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘சாகுந்தலம்’. சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தில்ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் வெளியிடும் இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த ஆண்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை.
ஒட்டுமொத்த படத்தையும் 3டி தொழில்நுட்பத்தில் மாற்ற உள்ளதால் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்படுவதாக படக்குழு தெரிவித்திருந்தது. பான் இந்தியா முறையில் 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படம் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த தேதியில் படம் வெளியாகாது என படக்குழு அறிவித்துள்ளது. இந்த தேதி மாற்றத்திற்கான காரணம் எதையும் குறிப்பிடாத படக்குழு விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
The theatrical release of #Shaakuntalam stands postponed.
The new release date will be announced soon
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago