தமிழின் மகத்தான பின்னணி பாடகரான வாணி ஜெயராம் மறைவுக்கு பாடகர் சித்ரா, இசையமைப்பாளர் ஜிப்ரான், தலைவர்கள் பிரகாஷ் ஜவடேகர், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், டிடிவி தினகரன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பின்னணி பாடகர் சித்ரா: “வாணி அம்மாவின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்டபோது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவரிடம் பேசினேன். வலுவான கிளாசிக்கல் அடித்தளத்துடன் கூடிய பல மொழி பாடகர் அவர். ஆன்மா சாந்தியடையட்டும்.”
இசையமைப்பாளர் ஜிப்ரான்: “பழம்பெரும் பாடகர் பத்ம பூஷண் வாணி ஜெயராம் மறைவு தமிழ் இசை உலகுக்கு உண்மையிலேயே மிகப் பெரிய இழப்பு. அவர் தனது குரலின் மூலம் ஏராளமான பாடல்களை விட்டுச் சென்றுள்ளார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.”.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: “வாணி ஜெயராம் அம்மாவின் மறைவுச் செய்தி கேட்டு மன வேதனையாக இருந்தது. அவரது மதிமயக்கும் குரலை மிஸ் செய்வேன். சொந்தமாக ரெக்கார்டிங் ஸ்டுடியோவை உருவாக்க அவர் என்னை ஊக்குவித்ததை என்னால் மறக்க முடியாது.”
» புகழஞ்சலி - வாணி ஜெயராம் | “ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு” - முதல்வர் ஸ்டாலின்
» “அவர் நன்றாகத்தான் இருந்தார்... தாயாகவே பழகுவார்” - வாணி ஜெயராம் வீட்டுப் பணியாளர் உருக்கம்
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்: “மிகச் சிறந்த பல்துறை இந்தியப் பாடகர்களில் ஒருவர், 'பத்ம பூஷண்' ஸ்ரீமதி வாணி ஜெயராமை இழந்துவிட்டோம். 5 தசாப்தங்களுக்கும் மேலாக தனது ஆத்மார்த்தமான மற்றும் இனிமையான குரலால் இசை ஆர்வலர்களை ஈர்த்தவர். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.”
அமமுக பொதுச் செய்லாளர் டி.டி.வி.தினகரன்: “வசீகரிக்கும் குரலால் தமிழர்களின் மனதைக் கட்டிப் போட்ட பிரபலப் பின்னணிப் பாடகர் வாணி ஜெயராம் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த திரைப்படங்களில் பாடி சிறப்பு சேர்த்தவர். அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உற்றார் உறவினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் உண்டோ அத்தனையும் பாடி நம்மையெல்லாம் மகிழ்வித்த இசைக்குயில் வாணி ஜெயராம் அவர்கள் மறைவுச் செய்தி மனத்துயர் அளித்தது. இந்தியாவின் இதய கமலமாக, பத்ம பூஷன் என்று வாழும் காலத்தில் விருது வழங்கிக் கொண்டாடப்பட்ட வாணி ஜெயராம். அவர்களின் இழப்பு இசை உலகின் பேரிழப்பு. அவரின் ஆன்மா அமைதி பெற வேண்டுகிறேன்.”
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்: “பிரபல பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும்,மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. தனது இனிமையான குரல் வளத்தால் அனைவரும் மனதிலும் இடம்பிடித்த வாணி ஜெயராம் அவர்களுக்கு அண்மையில் மத்திய அரசு பத்ம பூஷண் விருது அறிவித்து கௌரவித்தது. அவரது இழப்பு இசை ரசிகர்களுக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.”
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய இணைப்புகள் > பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் மறைவு | புகழஞ்சலி - வாணி ஜெயராம் | அற்புதமான பாடகர் - மனோ, குஷ்பு, டி.இமான் பகிர்வு | “ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு” - முதல்வர் ஸ்டாலின்
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago