நெல்லை: ‘பரியேறும் பெருமாள்' படத்தில் நடித்த தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். இன்று அதிகாலை 5 மணியளவில் அவர் காலமானார்.
நெல்லை தங்கராஜின் வறுமை நிலை கருதி, நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இணைந்து அவருக்கு புதிய வீடு கட்டி கொடுத்திருந்தது குறித்த செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உயிர் பிர்ந்தது. இவரது மறைவிற்கு திரையுலகினர், கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மனங்களை வென்ற நெல்லை தங்கராஜ்: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். சமூக நீதிக்கான குரல் ஓங்கி ஒலித்த அந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் ஒரு சில காட்சிகளிலேயே வந்தாலும் அழுத்தமான பாத்திரத்தால் அனைவரின் மனங்களையும் வென்றவர் நெல்லை தங்கராஜ். அவரைப் போன்ற பெண் வேடமிட்டு தெருக்கூத்தில் ஈடுபடும் கலைஞர்களின் வேதனையின் குரலாகவும் அவர் பிரதிபலித்தார்.
» கே.விஸ்வநாத் மறைவு | திரைக் கலைஞர்கள், தலைவர்கள், ரசிகர்கள் புகழஞ்சலி
» ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் கவனம் ஈர்க்கும் ‘பத்து தல’ படத்தின் ‘நம்ம சத்தம்’ பாடல்
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago