‘பத்து தல’ படத்தின் ‘நம்ம சத்தம்’ பாடலின் முன்னோட்ட வீடியோ

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர்கள் சிம்பு, கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘பத்து தல’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நம்ம சத்தம்’ பாடல் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்தப் பாடலில் Glimpse வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. இது இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடல் எனத் தெரிகிறது.

இந்தப் படத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜய் அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

வரும் மார்ச் மாதம் இந்தப் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தச் சூழலில் ‘பத்து தல’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நம்ம சத்தம்’ பாடல் வெளியாக உள்ளதை முன்னிட்டு, அதன் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

சுமார் 21 நொடிகள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் சிம்பு, கருப்பு நிற வேட்டி மற்றும் சட்டை அணிந்தபடி ஸ்டைலான நடன அசைவுகளை மேற்கொண்டு கவனம் ஈர்க்கிறார். அவரது தோற்றம் மிகவும் கெத்தாக உள்ளது. ஏஜிஆர் எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார் என தகவல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்