சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் பலம் நடித்து வரும் ‘தளபதி 67’ படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ்மேனன், அர்ஜூன், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்கின்றனர். இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் ‘விஜய் 67’ என அறியப்படுகிறது. இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இந்தப் படத்தின் அப்டேட் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வரும் நிலையில், அது குறித்த தகவல்களை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக பகிர்ந்து வருகிறது.
முன்னதாக, இந்தப் படத்தில் நடிகர் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி மற்றும் நடிகை ப்ரியா ஆனந்த் ஆகியோர் இணைந்து பணியாற்றி வருவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
தற்போது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர் அர்ஜூன் மற்றும் இளம் மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் கேமரவுக்கு முன் இந்தப் படத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago