இன்று மாலை வெளியாகிறது ‘விஜய்67’ அதிகாரபூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 67’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் சஸ்பென்ஸூடன் அறிவித்துள்ளது.

‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். ‘விஜய் 67’ என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரித்விராஜ் சுகுமாறன், த்ரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின் ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் ப்ரோமோ வீடியோ வரும் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் என கூறப்படும் நிலையில், இன்று மாலை படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. படத்தை தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டியோஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் சஸ்பென்ஸூடன் இதனை தெரிவித்துள்ளது. மாலை 6.07 மணிக்கு அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ள அந்த ட்வீட்டில் 67 புள்ளிகளை வைத்து லீட் கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE