பாலகிருஷ்ணா நடிப்பில் அண்மையில் வெளியான ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தைப் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. சங்கராந்தி பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி-12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், வரலட்சுமி சரத்குமார், ஹனிரோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்த இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
முழுக்க முழுக்க மாஸ் ஆக்ஷனை அடிப்படையாக கொண்டு ரூ.110 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.200 கோடி வசூலை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப்படத்தைப் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் படத்தின் இயக்குநர் கோபிசந்த் மலினேனியைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக இயக்குநர் கோபிசந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரஜினிகாந்திடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததது. ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தைப்பார்த்த அவருக்கு படம் மிகவும் பிடித்துள்ளது. படத்தைப் பற்றி அவர் பாராட்டி சொன்ன வார்த்தைகள் மற்றும் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிகள் எனக்கு இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் விட மிகப்பெரியது. நன்றி ரஜினிகாந்த் சார்” எனப் பதிவிட்டுள்ளார்.
This is a surreal moment for me
Received a call from the Thalaivar, The Superstar @rajinikanth sir. He watched #VeeraSimhaReddy and loved the film.
His Words of praise about my film and the emotion he felt are more than anything in this world to me. Thankyou Rajini sir
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago