இசைத்துறையை விட்டு கீரவாணி விலக நினைத்தார்: ஏ.ஆர்.ரஹ்மான்

By செய்திப்பிரிவு

ராஜமவுலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. அதை இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பெற்றார். அடுத்து, ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலிலும் அந்தப் பாடல் இடம்பிடித்துள்ளது. கீரவாணிக்கு பத்ம விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் இசையை விட்டு விலக விரும்பியதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் “கீரவாணி சிறந்த இசை அமைப்பாளர். ஆனால், குறைத்து மதிப்பிடப்பட்டவர். கடந்த 2015-ம்ஆண்டு இசைத்துறையை விட்டு விலக விரும்பினார். ஆனால் பிறகு தான் அவர் தொழில் வாழ்க்கைத் தொடங்கியது.

தங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைக்கும் எவருக்கும் அதுதான் வாழ்வு தொடங்கும் புள்ளியாகவும் இருக்கலாம் என்பதற்கு இது சிறந்த உதாரணம். இதை என் குழந்தைகளிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ‘ஆர்.ஆர்.ஆர்’ ஆஸ்கர் விருதை வெல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE