“மிகப் பெரிய தனிப்பட்ட இழப்பு” - டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி மறைவுக்கு சூர்யா இரங்கல்

By செய்திப்பிரிவு

புகழ்பெற்ற தெலுங்கு டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தியின் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற பின்னணி குரல் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி. 1990-களில் சினிமாவில் டப்பிங் கலைஞராக தனது பணியைத் தொடங்கியவர், கிட்டத்தட்ட 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். குறிப்பாக தெலுங்கில் வெளியாகும் நடிகர் சூர்யாவின் அனைத்து படங்களுக்கு ஆஸ்தான டப்பிங் கலைஞராக இருந்தவர் ஸ்ரீனிவாச மூர்த்தி.

அண்மையில் மாதவனின் ‘ராக்கெட்ரி தி நம்பி விளைவு’ படத்தின் தெலுங்கு பதிப்பில் மாதவன் குரலுக்கும், ‘விஸ்வாசம்’ படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்காக அஜித் குரலுக்கும் டப்பிங் செய்திருந்தார். நடிகர்கள் ஷாருக்கான், மோகன்லால், உபேந்திரா படங்கள் மற்றும் குறிப்பிட்ட ஹாலிவுட் படங்களின் தெலுங்கு பதிப்புகளுக்கு பின்னணி குரல் கொடுத்ததுள்ள அவர் இன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “இது மிகப் பெரிய தனிப்பட்ட இழப்பு! ஸ்ரீனிவாசமூர்த்தி காருவின் குரல் மற்றும் எமோஷன்ஸ் தெலுங்கில் என் நடிப்புக்கு உயிர் கொடுத்தது. உங்களை மிஸ் செய்வேன்.வெகு சீக்கிரம் சென்றுவிட்டீர்கள்!” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE