‘பெண்களின் முழு வாழ்வும் சமையல் அறையில் கழிகிறது’ - ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை

By செய்திப்பிரிவு

மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, தமிழில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன், நந்தகுமார், யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். துர்காராம் சவுத்ரி மற்றும் நீல் சவுத்ரிதயாரித்துள்ளனர். ஆர். கண்ணன் இயக்கியுள்ளார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் சுகாசினி மணிரத்னம் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது: இயக்குநர் கண்ணன் இந்தப் படத்தை மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என்றதும் முதலில் தயங்கினேன். பிறகு, படம் பாருங்கள் என்று கூறியதும் பார்த்தேன். மறு உருவாக்கம் என்றாலே ஒப்பீடு வரும். எனக்கும் ஒப்பீடும்,குழப்பமும் இருந்தது. 2, 3 நாட்கள் என்அம்மாவைக் கவனித்தேன். சமையலறைக்குச் செல்வார், வேலை பார்ப்பார், திரும்ப வருவார். இதையே தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தார். ஆனால், இத்தனை ஆண்டுகளாக இதை கவனித்ததே இல்லை. அன்றுதான்இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்றுமுடிவு செய்தேன். மேலும், கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையல் அறையிலேயே கழிந்து விடுகிறது. அதற்காகவே இப்படத்தில் நடிக்கவேண்டும் என்று நினைத்தேன். மலையாளத்தில் நடித்திருந்த நிமிஷாவின் நடிப்பில் 50% நடித்திருந்தாலே நான் மகிழ்வேன். இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

43 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்